நெய்வேலியில் கேப்டன் அவர்களின் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
நெய்வேலியில் கேப்டன் அவர்களின் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கை கொண்டான் பேரூராட்சியில்
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது
தேமுதிக கங்கைகொண்டான் பேரூர் செயலாளர் எஸ் .பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில் அவைத்தலைவர் ராஜசேகர் பொருளாளர் சக்திவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்
நெய்வேலி மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகே கேப்டன் அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா உள்ளிட்ட எழுத்து உபகரணங்கள் வழங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து சுமார் ஆயிரம் நபர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது
மேலும் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் போல் தத்துரூபமாக வேடமடைந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பாடல்களை பாடியவாறு நடன நிகழ்ச்சி நடைபெற்றது
இதனை பொதுமக்கள் பலர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சியில் துணைச் செயலாளர்கள் புஷ்பராஜ் சுரேஷ் தக்ஷிணாமூர்த்தி கவிதா மாறன் மாவட்ட பிரதிநிதிகள் முரளி முருகதாஸ் அழகுவேல் ராஜேந்திரன் கேப்டன் மன்ற செயலாளர் கண்ணன் துணைச் செயலாளர்கள் செந்தில் அருண் தொண்டரணி செயலாளர் ஏழுமலை துணைச் செயலாளர்கள் ராமதாஸ் செல்வம் ஸ்ரீராம் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமரன் துணை செயலாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்