பிரச்சினைகள் தீரவும் ஏற்ற வேண்டிய கூர்ம தீப வழிபாடு
மூலம், மகம், அஸ்வினி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள் செல்வ வளம் பெறவும்,
கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோஹிணி, திருவோணம் அஸ்தம் நட்சத்திரகாரர்களது தீராத பிரச்சினைகள் தீரவும் ஏற்ற வேண்டிய கூர்ம தீப வழிபாடு
உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி பாதம் – ஆமை வடிவம் ஆகும்.
மேலும் பரணி நட்சத்திரத்தின் வடிவம் என்பது விளக்கு வடிவம் ஆகும்.
இந்த இரண்டு நட்சத்திரங்களின் இரண்டு வடிவங்களும் இணைந்து இருக்கும் விளக்கு “கூர்ம தீபம்” என்று அழைக்கப்படுகிறது.(படம் கீழே)
உத்திராடம் நட்சத்திரத்திற்கு பரணி நட்சத்திரம் ஒன்பதாவது நட்சத்திரமாக வருவதால் உத்திராடம் நட்சத்திரத்திற்கு பரணி நட்சத்திரம் பரம மித்திரை தாரையாக வருகிறது.
பரணி நட்சத்திரத்திற்கு உத்திராடம் நட்சத்திரம் இருபதாவது நட்சத்திரமாக வருவதால் பரணி நட்சத்திரத்திற்கு உத்திராடம் நட்சத்திரம் சம்பத்து தார்ரையாக வருகிறது.
உத்திராடம் மற்றும் பரணி நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பரம மித்திர மற்றும் சம்பத்து தாரையாக வருவதால் கீழ்க்கண்ட நட்சத்திர நபர்கள் அவரவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமையன்று கூர்ம தீபத்தில் நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடுவது பல நன்மைகளை தரும்.
மூலம், மகம், அஸ்வினி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள் அவரவர் வீட்டில் வெள்ளிக்கிழமையன்று
கூர்ம தீபத்தில் நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு
செய்து வந்தால் மூலம், மகம், அஸ்வினி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்களுக்கு
செல்வங்கள் சேரும்.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோஹிணி, திருவோணம் அஸ்தம் நட்சத்திரகாரர்கள் அவரவர் வீட்டில் வெள்ளிக்கிழமையன்று கூர்ம தீபத்தில் நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோஹிணி, திருவோணம் அஸ்தம் நட்சத்திரகாரர்களது தீராத பிரச்சனைகள் தீரும்.