புதியதாக வாங்கிய சுவாமி சிலைகளை, புதியதாக வாங்கிய சுவாமி படங்களை பூஜை அறையில், பூஜைக்கு வைப்பதற்கு முன்பு நீங்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்…

ம் வீட்டு பூஜை அறையில் வைப்பதற்காக சுவாமி படங்கள், சுவாமி சிலைகள், பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் எது வாங்கினாலும் சரி, அதை வாங்கிய உடனேயே பூஜை அறையில் கொண்டுபோய் வைத்து, நம்முடைய பூஜையை தொடங்கி விடக்கூடாது. வெளியில் இருந்து நம் கைக்கு வரக்கூடிய பூஜை சம்பந்தப்பட்ட எந்த பொருளாக இருந்தாலும், அது எத்தனையோ பேரினுடைய கைகள் மாறி, எத்தனையோ சூழ்நிலைகளைக் கடந்து, பல கட்டங்களைத் தாண்டித்தான், நம் கைக்கு வந்து சேர்கின்றது.

இந்தப் பூஜை பொருட்களை வாங்கி நம் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜைக்குப் பயன்படுத்துவதற்கு முன்பாக, என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் சிலை வழிபாடு செய்ய வேண்டும் என்று, நீங்கள் ஒரு புதியதாக சிலையை வாங்குகிறீர்கள் என்றால், அந்த சிலையை வாங்கி வந்து அப்படியே பூஜை அறையில் வைத்து வழிபட தொடங்கி விடக்கூடாது. முதலில் அந்த சிலையை, மஞ்சள் சேர்ந்த தண்ணீரால் சுத்தப்படுத்தி விட்டு, அதன் பின்பு சுத்தமான மண் பானை அல்லது பித்தளை சொம்பு நிறைய சுத்தமான நல்ல தண்ணீரை நிரப்பி, அந்த தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள், இரண்டு துளசி இலைகளை போட்டு இந்த சிலையை அதில் மூழ்க வைத்து மூன்று நாட்கள் அப்படியே விட்டு விட வேண்டும்.
அந்த சிலையானது தண்ணீரில் மூழ்கி இருக்கும், அந்த 3 நாட்களும் சிலைக்கான பூஜையை நீங்கள் செய்ய வேண்டும். தண்ணீருக்குள் இருக்கும் சிலைக்கு பூ வைத்து பூஜை அறையில் தீபம் ஏற்றி, தீப தூப ஆராதனை காட்டி வழிபடலாம். தவறொன்றும் கிடையாது. மூன்றாவது நாள் அந்த தண்ணீரிலிருந்து சிலையை வெளியே எடுத்து, பாலபிஷேகம் செய்து, சுத்தமான தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து சுத்தம் செய்து விட்டு, மஞ்சள் குங்கும பொட்டிட்டு, சிலைக்கு கட்டாயம் நிவேதனம் படைத்து தீப ஆராதனை காட்டி உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இப்படியாக புது சிலையை உங்கள் வீட்டில் பிரதிஷ்டை செய்து கொள்வது நன்மையை கொடுக்கும். அடுத்தப்படியாக உங்கள் வீட்டில் சுவாமி படங்களை வாங்கினால் அந்த சுவாமி படங்களை கொஞ்சம் மஞ்சள், துளசி போட்ட தண்ணீரால் துடைத்து, அதன் பின்பு சுத்தமான துணியை போட்டு துடைத்து பூஜை அறையில் வைப்பது நல்லது.

சில பேர் எல்லாம் யாரிடமிருந்தாவது அன்பளிப்பாக ஏதாவது ஒரு சுவாமி சம்பந்தப்பட்ட பொருட்கள் வந்தால், அதைக் கொண்டு போய் அப்படியே பூஜை அறையில் வைத்து விடுவார்கள். இந்த தவறை இனி நீங்கள் செய்யாதீர்கள். யார் கையில் இருந்து எந்த பூஜை சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கினாலும் அப்படியே கொண்டுபோய் நம் வீட்டுப் பூஜை அறையில் வைக்கக் கூடாது. அந்தப் பொருளையும் மஞ்சள் துளசி கலந்த தண்ணீரால் சுத்தம் செய்த பின்புதான் பூஜைக்காக பயன்படுத்த வேண்டும்.

பூஜை சம்பந்தப்பட்ட ஜாமான்கள் ஏதேனும் வாங்கினால் கூட, தூபக்கால், மணி, பித்தளை தாம்பூலத் தட்டு எந்த பொருட்களாக இருந்தாலும் சரி, அந்த பொருளை முதலில் சுத்தமாக விளக்கி விட்டு, அதன் பின்பு மஞ்சள் கலந்த தண்ணீரில் ஒரு முறை கழுவி விட்டு அதன் பின்பு பூஜை செய்ய பயன்படுத்துவது நல்லது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையெல்லாம் உங்களால் செய்ய முடியாது எனும் பட்சத்தில் நீங்கள் புதியதாக வீட்டில் வைத்து வழிபட சிலை வாங்கினால், அந்த சிலையை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் கொடுத்து அந்த இறைவனின் பாதங்களில் மூன்று நாட்கள் வைத்து, அதன் பின்பு கூட அதை வீட்டிற்கு கொண்டு வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம்.

கண்ணுக்கு தெரியாத எந்த தோஷமாக இருந்தாலும் அது நம்மை தாக்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் மஞ்சள் கலந்த தண்ணீரில் பூஜை சம்பந்தப்பட்ட பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இனி உங்கள் வீட்டிலும் புதியதாக பூஜை பொருட்களை வாங்கினால் நம்பிக்கை உள்ளவர்கள் மேற்சொன்ன விஷயங்களை கடைப்பிடிக்கலாம்..

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *