அய்யா வைகுண்டர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும்-தொல்.திருமாவளவன்
அய்யா வைகுண்டர் அவர்கள் ஆன்மீகத் தளத்தில் நின்று அன்புவழியில் மக்களைத் திரட்டி சனாதனக் கொடூரங்களை எதிர்த்துப் போராடினார். திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைகளுக்கு ஆளானார். பெண்களை மாராப்புத் துணி உடுத்த வைத்தார். ஆண்களைத் தலைப்பாகை கட்டவைத்தார். சமத்துவத்தை வென்றெடுக்க சனாதனிகளைக் கடுமையாக எதிர்த்துக் களமாடினார். அத்தகைய சமூகப் புரட்சியாளரின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென தோள்சீலை போராட்டத்தின் 200 ஆண்டு விழாவில்தொல்.திருமாவளவன் உரையாற்றினார்