தன் உயிரை மட்டும் தற்காத்து தப்பிக்கும் கோழையில்லை பிரபாகரன்! – சீமான்!
தன் மகன் பாலசந்திரனை சாககொடுத்துவிட்டு அண்ணன் பிரபாகரன் மட்டும் பத்திரமாக தப்பி போயிருப்பார் என நினைக்கிறீர்களா? எந்த சூழலிலும் நாட்டைவிட்டு போகமாட்டேன் என்று வீரமாக நின்று சண்டை செய்தவர் அண்ணன் பிரபாகரன், தன் உயிரைமட்டும் தற்காத்து கொண்டு தப்பி போகும் கோழைஎன்று நினைக்கிறீர்களா? போரில் பேரழிவை சந்தித்துவிட்டபிறகு 15ஆண்டு காலம் பேசாமல் இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அவர் சொல்லிவிட்டு வரமாட்டார் வந்து விட்டுதான் சொல்வார் அதனால் தேவையின்றி குழப்பிக் கொண்டிருக்கவேண்டாம். அப்படி ஒருவேளை மக்கள் முன் தோன்றினால் அப்போது பேசுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்