“மக்களோடு மக்களாக” மாட்டு வண்டி ஏறி பொங்கல் கொண்டாட்டம்!
சேலம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டமங்கலம், பனங்காட்டூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மக்களோடு மக்களாக மாட்டு வண்டி ஏறி வந்து , விவசாயிகளின் பிரதிநிதியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தைப்பொங்கல் கொண்டாடினார். இதில் சுற்று பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.