சென்னை உயர்நீதிமன்றநீதிபதிகள் நியமனம் சர்ச்சைகள்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, அவசர விசாரணையாக உச்ச நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வைகை, அன்புக்குரிய நண்பர் அண்ணா மேத்யூ ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.
அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக விக்டோரியா கௌரி இருந்தார் என்பதே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதற்கான காரணம்.
இவ்வாறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
1.ஓமந்தூரார் சென்னை ராஜதானியில் பிரீமியராக (முதல்வர்) இருந்த காலத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஏ.அழகிரிசாமி அவருடைய ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்தான விமர்சனங்கள் எழுந்தன. அழகிரிசாமி எனது உறவினரும் கூட . நீதித்துறையைச் சேர்ந்த அவர் பின்னாள்களில் உச்ச நீதிமன்றம் வரை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தார். கோவில்பட்டி அருகே நாகம்பட்டியில் பிறந்தவர். இவர் சி.சுப்ரமணியத்தின் கல்லூரி கால வகுப்புத் தோழர். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர். காங்கிரஸ் அனுதாபி. நீதித்துறையில் இருந்த இவரை முதலமைச்சரின் ஆலோசகராக எப்படி நியமிக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது. அதுதான் முதலாவது சர்ச்சை.
2.அண்ணா மறைவுக்குப் பின் கலைஞர் காலத்தில் நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னாட்களில் அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.
3. நீதிபதி எஸ்.ரத்னவேல் பாண்டியன் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் திமுகவின் மாவட்டச் செயலாளர். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது சர்ச்சைகளும் எழுந்தன. பின்னாட்களில் இவர் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதியாகச் சென்றார்.
4. நீதிபதி எஸ்.மோகன் திமுக அனுதாபி. அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் உண்டு.
5. நீதிபதி வேணுகோபால், திராவிட கழகத்தைச் சார்ந்த அபிமானி. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
6. சமீப நாட்களில் ராஜ இளங்கோ என்ற திமுக நிர்வாகி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் உண்டு. பின்னாட்களில் அவர் ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பிலிருந்தார்.
7. நீதிபதி கற்பகவிநாயகம் அதிமுகவைச் சேர்ந்தவர். எம்ஜிஆருக்கு மிகவும் நெருங்கியவர். அவரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.
8. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்த ப.சதாசிவம், அதிமுக அனுதாபி. அவரும் தொடக்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கேரள ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.
இவை எல்லாம் கடந்த கால நிகழ்வுகள்.
(சென்னை_உயர்நீதிமன்ற_நீதிபதிகள்_நியமனம்_சர்ச்சைகள்.
கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்
பதிலளிமுன்அனுப்பு |