தாம்பரத்தில் இண்டர்நேஷனல் அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி
தாம்பரத்தில் இண்டர்நேஷனல் அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.
ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் தமிழக வீரர்களுடன் போட்டியிட்டனர்.
மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் கிக்ஸ் ஆண்ட் பஞ்சஜ் கராத்தே அகடாமி சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பங்கேற்க ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் பபல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கத்தா, குமுத்தே ஆகிய பிரிவுகளில் தனிதனியே போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவுகளிலும் வீரர்கள் தங்களது தனி திறமையை வெளிப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை சென்சாய் கார்த்திகேயேன் மற்றும் சென்சாய் வனிதா ஆகியோர் வழங்கினர்.
இது குறித்து கிக்ஸ் ஆண்ட் பஞ்சஜ் கராத்தே அகடாமியின் நிறுவனர் தமிழகத்தில் இண்டர்நேசனல் அளவில் மிகப்பெரிய கராத்தே போட்டிகளை நடத்தப்பட்டுள்ளது. , கராத்தே கலையை பள்ளிகள் தோறும் கற்று கொடுக்க நடவடிக்கைகள் தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.