Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

Blog

உலக நலன் வேண்டி:படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 108 பெண்கள் பூஜை

By tamilnewsmedia0
August 9, 2026 1 Min Read
0

தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காகவும், நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும் இன்று மாலை குத்துவிளக்கு பூஜை நடைபெற்றன.

இதில் 108 பெண்கள் பாரம்பரிய உடையுடன் கலந்துகொண்டு குத்துவிளக்குகளை ஏற்றி அம்மனை வழிபட்டனர். விவசாயம் செழிக்க வேண்டும், வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டும் என்றும், உலக மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

கோவில் வளாகம் முழுவதும் 108 விளக்குகளின் ஒளியும், குருக்களின் வேத மந்திர ஒலியும் எதிரொலித்தன. பக்தர்கள் பாடல்கள் பாடி அம்மனை தரிசனம் செய்தனர்.மங்களாரத்தி முடிந்ததும் மூலவா் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீபாரதனை நடைபெற்றது

பூஜைகளின் நிறைவில் பங்கேற்ற 108 பெண்களுக்கும் மஞ்சள், குங்குமம், புடவை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம்* வழங்கப்பட்டது.

இந்த பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

க

Next

வடலூரில் அரசு மருத்துவர் வீட்டின்கதவை உடைத்து 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு,மர்ம நபர்கள் கைவரிசை

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme