Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

Blog

க

By tamilnewsmedia0
August 8, 2026 1 Min Read
0

கோவையில் நான்காம் வெள்ளி – காய்கறி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன்…

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..

கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் திருக்கோவிலில், ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.

விழாவையொட்டி, ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காய்கறிகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசிக்க திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.

தொடர்ந்து சிவஸ்ரீ மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் வெங்கடேஷ் சிவம் முன்னிலையில் தீட்சிதன்,சரவணன்,கலாமணி குடும்பத்தார்,சரவணன் , ஜனனி அஸ்வினி குடும்பத்தார், செந்தில்,சுமதி குடும்பத்தார், கிஷோர், கௌசிகா குடும்பத்தார், வெங்கடசுப்பிரமணியம் ,
ஸ்ரீவித்யா, குடும்பத்தார், யுவராஜ் காயத்ரி குடும்பத்தார் ஆகியோர்களின்
ஏற்பாடுகளில் அம்மனுக்கு ஸ்ரீவாளி பூஜை, தேர் வடம் வருதல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பி அம்மனை வழிபட்டனர்.

பின்னர் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

திருவாரூர் அருள்மிகு பழனி மலை இடும்பன் ஆலயத்தில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

Next

உலக நலன் வேண்டி:படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 108 பெண்கள் பூஜை

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme