படிக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளே உஷார்
பள்ளி மாணவர் மாணவிகளின் நலனுக்காக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் குறிஞ்சிப்பாடி காவல்துறை
படிக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளே உஷார்
பள்ளி மாணவர் மாணவிகளின் நலனுக்காக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் குறிஞ்சிப்பாடி காவல்துறை
மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளாததால் குறிஞ்சிப்பாடி காவல்துறை உதவி ஆய்வாளர் பிரசன்னா பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை
குறிஞ்சிப்பாடி காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் போதை வஸ்துக்களை ஒழித்துக் கட்டவும் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காக காவல்துறைக்கு துறையைச் சார்ந்த பல்வேறு வேலைபளுகள் மத்தியிலும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தணிக்கவணம் செலுத்தி அரசு பள்ளி மாணவர் மாணவிகள் தமிழகத்தில் நீட் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று சமுதாயத்தில் ஏழை எளிய மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் மருத்துவராக வரவேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசு அறிவித்துள்ள சலுகையை பயன்படுத்தி நீட் நுழைவு தேர்வுக்கு நுழைவதற்கு ஒரு ஊன்றுகோலாக குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்து வரும் உதவி காவல் ஆய்வாளர் பிரசன்னா அவர்களும் இனைந்து இலவசமாக நடத்தி வரும் இலவச நீட் தேர்வு பயிற்சியிம் தீய பழக்கங்களில் மாணவர் மாணவிகள் ஈடுபடாமல் இருக்க ஒவ்வொரு பள்ளியாகச் சென்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கு சென்று காத்திருந்து கலை நிகழ்ச்சி நடத்தி வருபவரிடம் 10 நிமிடம் நேரத்தை பெற்று ஒவ்வொரு மேடைகள் ஏறிச் சென்றும் ஒவ்வொரு கிராமத்திற்குச் சென்றும் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பித்தும் பல்வேறு அறிவுரைகளை கூறியும் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி கொள்வதற்கான முயற்சிகளை குறிஞ்சிப்பாடி காவல்துறையில் உள்ள காவல் ஆய்வாளர் செல்வம் உதவி காவல் ஆய்வாளர் பிரசன்னா மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் மாணவ மாணவிகளை தனது பிள்ளைகளாக நினைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். ஆனால் இதை பயன்படுத்திக் கொள்ளாமல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மற்றும் எஸ் கே வி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குள் மோதல்களை உருவாக்கி அடிதடிகளில் இறங்கி வருவதால் இதை அடக்குவதற்கு குறிஞ்சிப்பாடி காவல்துறை உதவி ஆய்வாளர் பிரசன்னா அவர்கள் மாணவர் மாணவிகளை இனிமேல் மென்மையான போக்கில் கண்டிக்கப்பட மாட்டாது மோதல்கள் மற்றும் அடிதடிகளில் இறங்கும் மாணவர்கள் மீது இனிமேல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இப்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் பொழுது உங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதையும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணர்த்திப் பேசினார். ஆகையால் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு மாணவர் மாணவிகள் நல்லெழுக்கத்தோடு நடந்து கொண்டு நன்றாக படித்து நமது இந்தியாவை வளமான இந்தியாவாக உருவாக்குவோம் என அறிவுரையும் வழங்கினார்.