20ம் ஆண்டு சமயபுரம் பாதயாத்திரை!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மாருதூர் தெற்குப்பட்டிகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சை மாரியம்மன் கோவில் பக்தர்கள் ஆண்டுதோறும் பால் குடம் எடுத்து வழிபாடு செய்து சமயபுரம் மாரியம்மன் தரிசிக்க நடந்து செல்வது வழக்கம். இதனையொட்டி பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, பூங்கரகம், அம்மன் ஆட்டம், பம்பை உடுக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஏரியிலிருந்து கரகம் ஜோடிக்கப்பட்டு பக்தர்கள் விரதம் இருந்து பால் குடத்தை முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்து கோவிலை அடைந்தனர்.இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் வருகின்ற13ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சக்தி பூஜையும் 14 ம் தேதியில் புதன்கிழமை அன்று விளக்கு பூஜையும் , 16ம் தேதி மாருதூர் தெற்குப்பட்டிகிராமமக்கள் மாலை அணிந்து கொண்டவர்கள் சமயபுரம் நோக்கி நடைபயணம் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.