வடலூர் நகராட்சியில் புதிய பஸ் நிலையம் நிலையம் அமைத்தல் ,வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ‘

வடலூர் நகராட்சியில் புதிய பஸ் நிலையம் நிலையம் அமைத்தல் தொடர்பாக வணிகர் சங்கத்தினர்களுடன்
கலந்தாய்வு மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நகர மன்றதலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி
ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார்.
வடலூர் நகராட்சியில் ரூ5 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதியதாக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இது குறித்து வணிகர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 
வாடகை தொகையினை நிலுவையின்றி உடன் செலுத்தி கடையினை மீண்டும் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். இம்மாத இறுதிக்குள் நிலுவையின்றி வாடகை தொகையினை செலுத்துபவர்களுக்கு, புதிய பேருந்து நிலையத்தில் கடை தரும்போது முன்னுரிமை அளிக்கப்படும்.என முடிவு செய்யப்பட்டது. நகர திமுகசெயலாளர் தமிழ்செல்வன், நகரமன்ற துணைத் தலைவர் சுப்புராயலு,நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், மேலாளர் (பொறுப்பு) முத்துராமன், சுகாதார ஆய்வாளர் பாக்கியநாதன், வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம்,வருவாய் உதவி ஆய்வாளர்கள்,இளநிலை உதவியாளர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள்,வணிகர் சங்க நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்
வடலூர் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நகர மன்ற தலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. அருகில் ஆணையாளர் பானுமதி, நகர செயலாளர் தமிழ்ச்செல்வன்

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial