தமிழகநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,கடலூர்மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
தமிழகநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,கடலூர்மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வாயிலாகசெயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்
துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா,முன்னிலையில் கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்
துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி மற்றும் வடலூர் நகராட்சிகள், பெண்ணாடம்,மங்கலம்பேட்டை,
குறிஞ்சிப்பாடி, கெங்கைகொண்டான் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் விருத்தாச்சலம், மங்களூர், நல்லூர் ஒன்றியங்களைச் சார்ந்த 625 ஊரக
குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் நபார்டு வங்கி (NABARD) மற்றும் குறைந்தபட்சம்
சேவை திட்டம் (MNP) நிதி உதவியின் கீழ் ரூ.479 கோடி மதிப்பீட்டில் 4 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நெய்வேலிபழுப்புநிலக்கரி இரண்டாவது சுரங்கத்திலிருந்து இத்திட்டமானது
வெளியேற்றப்படும் நீரினை, நீர் ஆதாரமாக கொண்டு கீழ்வளையமாதேவி கிராமத்தில் அமையவுள்ள 31.26 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு
கொண்டு செல்லப்பட்டு, அதி நவீனதொழில் நுட்பம் மிகுந்த உபகரணம் (ஆல்ட்ரா வடிகட்டுதல்
Membrane Treatment Technolgy) மூலம் நீர் சுத்திகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது
உள்ளது.
இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர்கள், விருத்தாச்சலம் வட்டத்திற்குட்பட்ட புதுக்கூரப்பேட்டை ஊராட்சியில் தரைமட்ட நீர் சேகரிப்புத்தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீர் உந்தும் குழாய்கள் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி
கட்டப்பட்டுள்ளதையும், அதன் அருகே கூட்டு குடிநீர் திட்டம் குறித்த விளக்க புகைப்படம்
கண்காட்சி அமைக்கப்பட்டதை பார்வையிட்டதோடு அப்பணிகளை துரிதமாக முடித்து,மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்,
துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வடலூர் நகராட்சியானது தேர்வு நிலை பேரூராட்சியாக கடந்த
17.12.2021 முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது
வருகிறது. வடலூர் நகராட்சிக்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ்
ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அமைச்சர்கள், கே என் நேரு, அவர்கள்,எம்ஆர்கே, பன்னீர்செல்வம் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். நகராட்சி நிர்வாக இயக்குனர், சசிகலா,மாவட்ட கல்விக்குழு தலைவர் இன்ஜினியர் சிவக்குமார், வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் பானுமதி, நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், நகரமன்ற துணைத்தலைவர் சுப்புராயலு, நகர செயலாளரும், கவுன்சிலருமான தமிழ்ச்செல்வன், மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்துநிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாநகராட்சிகுட்பட்ட வண்டிபாளையம் பகுதியில் கலைஞர் நகர்புற
மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45.30 இலட்சம் மதிப்பீட்டில் சுப்ரமணியர்குளம் தூர்வாரி
மேம்படுத்தப்பட்ட பணியையும், கரையேரவிட்டகுப்பம் பகுதியில் மூலதன மானியத் திட்டநிதியின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய நவீன எரிவாயு தகன
மேடை கட்டுமான பணிகளையும், மஞ்சைநகர் மைதானத்தின் அருகில் கலைஞர் நகர்புற
மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.15 கோடி மதிப்பீட்டான அறிவுசார் மையம் கட்டுமானம்
பணிகளையும் பார்வையிட்டனர்.
உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் .சபா.இராஜேந்திரன் , கடலூர்
சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் , விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர்
எம்.ஆர்.இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை
இயக்குநர் வி.தட்சணாமூர்த்தி, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்ரமணியம், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி
ராஜா அவர்கள், கடலூர் மாநகராட்சி துணை மேயர் .தாமரைச்செல்வன் ,
நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர்கள் .உதயகுமார் , .பூங்கொடி , தலைமை பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேலூர் மண்டலம்மனோகரன் , மாநகராட்சி ஆணையாளர் .கிருஷ்ணமூர்த்தி ,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனிவேல் ,நிர்வாக பொறியாளர் அண்ணாமலை அவர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.