கும்பகோணம் அருகேதிருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்) ஆலய தரிசனம்

கும்பகோணம் அருகேதிருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்) ஆலய தரிசனம்

மூலவர்- உப்பிலியப்பன் (ஒப்பிலியப்பன்)
உற்சவர்- பொன்னப்பன்
தாயார்- பூமாதேவி
தீர்த்தம்- அகோராத்ர புஷ்கரணீ

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டத் திருத்தலம்.

கும்பகோணத்திலிருந்து தெகிழக்கே காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளத் தலம் இது.திருநாகேஷ்வரம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
மார்க்கண்டேய மகரிஷி,காவிரி,கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர் இப்பெருமாள்.இத்தலத்திற்கு செண்பகவனம்,ஆகாச நகரம்,திருவிண்ணகர்,மார்க்கண்டேய க்ஷேத்திரம்,ஒப்பிலியப்பன் கோயில், தென் திருப்பதி ஆகிய பெயர்களும் உண்டு.
நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி தந்துள்ளார் எம்பெருமான்.அவை, பொன்னப்பன்,மணியப்பன்,முத்தப்பன்,என்னப்பன்,திருவிண்ணகப்பன்.
மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்க்கண்டேய மகரிஷி, பூமாதேவி தனக்கு மகளாகவும், திருமால் மாப்பிள்ளை ஆகவும் ஆக வேண்டும் என கடுந்தவம் செய்தார்.அப்போது துளசி வனத்தில் அழகிய பெண்குழ்ந்தையைக் கண்டு அதற்கு பூமா தேவி எனப் பெயர் வைத்து வளர்த்து வந்தார்.பூமாதேவி திருமண வயதை எட்டிய போது, வயது முதிர்ந்த முதியவர் வேடம் பூண்டு பெருமாள் , மார்க்கண்டேய மகரிஷி முன் வந்து அவரது பெண்ணைதனக்கு மணம் முடிக்க வேண்டினார்.
வந்தது முதியவர் என்று அறியாத மகரிஷி, வயதான ஒருவருக்கு தன் பெண்ணை மணம் முடிக்க மறுத்து..சால்ஜாப்புகளைச் சொன்னார்.மார்க்கண்டேய ரிஷி, என் பெண் சிறியவள்.அவளுக்கு உப்பு போட்டுதான் சமைக்க வேண்டும், என்று கூட அறியாதவள் என்றார்
திருமால் விடவில்லை.செய்வதறியாது கண்களை மூடி பெருமாளை வேண்டிய போது உப்பிலியப்பன் தோன்றி “உன்னிடம் வளர்ந்தது பூமாதேவி” என்று கூறி மணம் முடித்தார்.மார்க்கண்டேயர் விருப்பமும் நிறைவேறியது.
பூமாதேவியை மணந்து உப்பில்லாமல் அவள் சமைத்த சமையலை உண்டதால் உப்பிலியப்பன் என்றும் பெயரானது.இன்றும், பெருமாளுக்கு உப்பில்லா பிரசாதமே படைக்கப் படுகிறது.
திருப்பதி வெங்கடாசலபதிக்கு இருப்பது போல இப்பெருமாளுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.
(லட்சுமியின் அம்சமான பூமாதேவி ஒரு சமயம் பெருமாளிடம், ‘எப்போதும் மகாலட்சுமியையே மனதில் தாங்கிக் கொண்டு இருக்கறீர்கள்.எனக்கும் அந்த பாக்கியத்தை அருளுங்கள் என்றாள்.ஆகவே, பூமா தேவியை குழந்தையாக துளசிவனத்தில் கிடத்தி, மார்க்கண்டேயரால் துளசி என பெயர் வைக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு அவளை மணந்தார் யாருக்கும் ஒப்பில்லா ஒப்பிலியப்பன் .மணந்தபின் துளசிமாலையாக மார்பில் அணிந்தார்.ஆகவேதான் இன்றும் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு துளசிமாலை அணிவிப்பது வழக்கமாய் உள்ளது என்றும் கூறுவர்)

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial