அரியலூரில் நகராட்சியின் சார்பில் புகையில்லா போகிப் பண்டிகை விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
அரியலூர் நகராட்சியின் சார்பில் நடைபெற்ற புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி மற்றும் பசுமைப் பொங்கல் மரம் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
அரியலூர் நகராட்சியின் சார்பில் நடைபெற்ற புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி மற்றும் பசுமைப் பொங்கல் மரம் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
அரியலூர் நகராட்சியின் சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின்கீழ் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடும் வகையில் புகை நமக்கு பகை, புகையில்லா போகி நமக்கு பெருமை என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் 100 கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு புகையில்லா போகி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கமிட்டும் பழைய நகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி தேரடி, பெருமாள் கோவில் தெரு, சத்திரம் வழியாக மீண்டும் தேரடி, பெருமாள் கோவில் தெரு, பழைய நகராட்சி அலுவலகத்தில் வந்தடைந்தனர்.
தொடர்ந்து, பசுமைப் பொங்கல் கொண்டாடும் வகையில் நகராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.நகரில் உள்ள நகராட்சி பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, நகராட்சி பகுதிகளிலும், நீர்நிலைகளிலுள்ள கரைகளிலும் மரக்கன்றுகளை நட நகராட்சி அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி, வருவாய் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் (பொ) தமயந்தி, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.