வள்ளலார் தெய்வநிலையத்திற்கு சன்மார்க்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்,
“வடலூர் நகர பாரதிய ஜனதா கட்சியின்செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்”
கடலூர், மாவட்டம்
வடலூரில்தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பின் ஆலோசனையின்பேரில் கடலூர் கிழக்கு மாவட்டம் வடலூர் நகர பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு வடலூர் நகர தலைவர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது மற்றும் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் மாநில இளைஞர் அணி செயலாளர் ரமேஷ்,ஒன்றிய தலைவர் ராஜசேகர் நகர பொதுச்செயலாளர்கள் அருளரசன், பாலுஅவர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாமிதுரை , தங்கமணி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நகர தலைவர் கோபி கட்சிநிர்வாகிகள்,
கோவிந்தராஜ், பாஸ்கரன் நகர துணை சிவசண்முகம் அவர்கள் திரு B. கோவிந்தராஜ் மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் மைவிழி சக்திவேல் ரேகா வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்,இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்
*வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்திற்கு, சன்மார்க்கர்களை, மட்டுமே, அறங்காவலர்களாக, நியமனம் செய்ய வேண்டும்,
*வடலூருக்கு என்று 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல்
கல்லூரி தொடர்ந்து வடலூரிலேயே செயல்படும் வண்ணம் உரிய இடம் தேர்வு
செய்து, நிரந்தர கட்டிடங்கள் அமைத்து தர தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
* வடலூர் அய்யன் ஏரியின் அருகில் உள்ள இடுகாட்டில் (மயானம்) புதைப்பதற்கானஇடம் இல்லை. அதற்கு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தேவையான இடம் ஒதுக்கி தரவேண்டும். மேலும் எரிவாயு தகனமேடை அமைத்திட நகராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*வடலூர் நகரத்தில் 9வது வார்டு இரயிலேகேட்டு அருகில் உள்ள மதுபான கடைபொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மேலும் அடிக்கடி இரயில்
தண்டவாளத்தில் மது அருந்தி விட்டு தண்டவாளத்தை கடக்கும்போது குடிமகன்கள் விபத்துக்கு
உள்ளவதால் ,அந்த மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.
* வடலூர் நகரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில்தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. முக்கிய இடத்தில் தபால் அலவலககட்டிடம் கட்ட இடம் இருந்தும் புதிய கட்டம் கட்டாமல் வாடகை கட்டத்திலேயே,அதுவும் முதல் மாடியில் இருப்பதால் உடல் ஊனமுற்றறோர் மற்றும்வயதானவர்கள் அலுவலகம் சென்றுவர மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே மத்திய அரசின் தொலைதொடர்பு துறை அமைச்சருக்கு வடலூர் நகரதபால் அலவலகம் கட்ட அனுமதி வழங்க வடலூர் நகர பாஜக
கேட்டுக்கொள்கிறது.