போகர் உருவாக்கிய பிரசித்தி பெற்ற பாதாள செம்பு முருகனுக்கு ஒன்றறை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராஜ அலங்கார பவள முத்துக்களால் தைத்த உடை- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது ராமலிங்க பட்டி கிராமம். இக்கிராமத்தில் போகர் உருவாக்கிய பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் தரை பகுதியில் இருந்து பூமிக்கு அடியில் சுமார் 20 மீட்டர் அடியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் சிலை முழுவதும் செம்புவால் செய்யப்பட்டது. இந்த முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றிருப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம்
செய்தனர். தைப்பூசத் திருநாள் என்பதால் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பாதாள செம்பு முருகனுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பவள முத்துக்களால் ஆன ராஜா அலங்கார உடை தைத்து சுவாமிக்கு அணிந்திருந்தனர். இந்த அழகான காட்சியை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசித்து
சென்றனர்.
இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கோவில் ஆதினம் அறிவாதீனம் மூலம் செம்பு குடுவையில் அடைக்கப்பட்ட மூலிகை திருநீறு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருநீற்றை பக்தர்கள் பூசி செல்வதால் அனைத்து விதமான நோய் நொடிகள் நீங்குவதாகவும், உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் பக்தர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். அதேபோல் இங்கு வரும் பக்த கோடிகளுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.