திண்டுக்கல்லில் பிரதமர் மோடி உரை
மிகவும் முக்கியமான காலத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள்.
காந்தியின் கனவுகளுக்கு சவால் நிறைந்த காலம் இது.
தென்னிந்திய மொழிகளை அனைவரும் கற்க வேண்டும், அதிலும் தமிழை கற்க வேண்டும் என சொன்னவர் காந்தி
காந்தியை நீண்ட காலமாக மறந்துவிட்டார்கள்.
கடந்த 8 ஆண்டுகளில் காதி விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
கதர் என்பது சர்வதேச ஆடையாக மாறிவிட்டது.
கிராமத்தின் ஆன்மா.. நகரத்தின் வளர்ச்சி (தமிழில் கூறினார் பிரதமர்)
கிராம உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுயசார்பு பாரதம் திட்டத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுதேசி இயக்கத்தின் மையப் புள்ளி தமிழ்நாடு.
தேச நலன் விவகாரத்தில் தமிழகம் எப்போதும் முதலிடத்தில் உள்ளது.
கிராமங்களில் இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
இயற்கை விவசாயம் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் கிராமங்களும் தன்னிறைவு பெற முடியும்.
கிராம பெண்களின் வெற்றி, தேசத்தின் வெற்றி
- பிரதமர் மோடி