குடிநீர், கழிவறை, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி பணியாளர்களால் தீவிரமாக நடந்து வருகிறது
வடலூர், ஜன.28:
வடலூரில் திருஅருட்பிரகாச வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா வெகுசிறப்பாக நடைபெறும்.இதையடுத்து இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் 5ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) 152 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வடலூர் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் சிவக்குமார் தலைமையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் சிவக்குமார் கூறியதாவது:
ஜோதி தரிசன விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் லட்சக்கணக்கில் வடலூரில் பெருந்திரளாக கூடுவார்கள். அதுமட்டுமின்றி வடலூரில் வள்ளலார் சர்வதேச மையமாக அறிவித்து வடலூருக்கு மேன்மேலும் பெருமை சேர்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பரிந்துரை செய்த தமிழக வேளாண்மை மற்றும் உலக நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இந்த கூட்டத்தின் வாயிலாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். எனவும் இங்கு தைப்பூச திருவிழாவிற்கு வரும் சன்மார்க்க அன்பர்கள் தங்குவதற்கு, தேவையான அடிப்படை வசதியான, குடிநீர், கழிவறை, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி பணியாளர்களால் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையத்துடன் சேர்ந்து முழு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும். பணியாளர்கள் அதிகமாக தேவை ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள நகராட்சி பணியாளர்களை கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் ஆணையாளர் பானுமதி,துணைத் தலைவர் சுப்புராயலு,பொறியாளர் சிவசங்கரன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.