கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், மீன்வளத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு
கடலூர்மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் இன்று
(18.11.2022) சாமியார்பேட்டை மீனவ கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு வானிலை
முன்னெச்சரிக்கை செய்திகள் முறையாக கிடைக்கப்பெறுகிறதா எனவும், மீனவர்கள்
வானிலை எச்சரிக்கை அறிவிப்புகளை முறையாக பின்பற்றுகின்றனரா எனவும்
மற்றும் சாமியார்பேட்டை மீன்பிடி இறங்குதளத்தில் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும்
மீன்வளத்துறையின் மூலம் அவ்வவ்வபோது கொடுக்கப்படும் வானிலை எச்சரிக்கையினை முறையாக பின்பற்ற வேண்டும் என அப்பகுதி மீனவ மக்களிடம்
அறிவுறுத்தினார். அதன் பின்னர் சாமியார்பேட்டை மீனவ கிராமத்தில்,சுற்றுலாவினை, மேம்பாடு செய்வது தொடர்பாக தகுதியான இடத்தினை தேர்வு
செய்வது குறித்தும் ஆய்வு செய்தார்.