வைகோவுக்கு ‘தமிழ்நாட்டின் உரிமைக்குரல்’ விருது வழங்கல்..!
Blacksheep யூடியூப் மீடியா சார்பில், குரலின் ஆளுமைகள் என்றத் தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை காரமாரசர் அரங்கத்தில் நடைபெற்றது. தலைவர் வைகோ, பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட அரசியல் மற்றும் கலைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய குரல் ஆளுமைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், தமிழக வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகவும் கடந்த அறுபது ஆண்டுகளாக ஓய்வின்றி போராடி வரும் போராளித் தலைவர் இயக்கத் தந்தை வைகோ உழைப்பையும், தியாகத்தையும் அங்கீகரிக்கும் வகையில் Blacksheep Media சார்பில் ‘தமிழ்நாட்டின் உரிமைக்குரல்’ என்ற விருதினை வழங்கி சிறப்பித்தார்கள். பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர், இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்து வருபவர், நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாகத் திகழும் ஆர்.நல்லக்கண்ணு ‘தமிழ்நாட்டின் உரிமைக்குரல்’ என்ற விருது தலைவர் வைகோக்கு வழங்கப்பட்டது. தலைவர் வைகோ உழைப்பிற்கும், தியாகத்திற்கும், மக்கள் பணிக்கும் மேலும் ஒரு அங்கீகாரமாக இந்த விருது இருக்கும். Blacksheep மீடியாவிற்கு என் சார்பிலும், மறுமலர்ச்சி தி.மு.க தொண்டர்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தனது x பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.