வடலூர் மக்களின் நீண்ட நாள் ரயில்வே மேம்பாலம் கோரிக்கை நிறைவேறுமா ????
வடலூர் மக்களின் நீண்ட நாள் ரயில்வே மேம்பாலம் கோரிக்கை நிறைவேறுமா ????
09.08.2023, வடலூர்
கடலூர் மாவட்டம் வடலூரில் பரபரப்பான காலை வேளையில் நெய்வேலி பங்கர் பழுப்பு நிலக்கரி ஏற்றுவதற்கு கூட்ஸ் நிறுத்துவதற்கு போதிய இட வசதிகள் இருந்தும் ஐந்து அல்லது மூன்று பெட்டிகள் குறைத்தோ நிறுத்தினால் காலை வேளையில் பரபரப்பான அவசரமான சூழலில் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் செல்வதற்கு தடை இல்லாமல் சூழல் ஏற்படும்.
தினம்தோறும் நெய்சர் பஸ் ஸ்டாப் முதல் சிதம்பரம் ரோடு சர்ச் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வடலூர் நான்குமுனை சந்திப்பில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது , கடலூரில் இருந்து விருத்தாச்சலம் செல்வதற்கு தடை இல்லாமல் சூழல் ஏற்படும்.
கண்ணுதோப்பு வெளிப்புற பைபாஸ் ரோடு வந்தாலும் , வடலூரில் வியாபாரம்,வணிகம் மற்றும் விவசாயம் செழிக்க இந்த ரயில்வே மேம்பாலம் அவசியம்.
விரைவு புகைவண்டி செல்வதற்கும் அரை மணி நேரத்துக்கு முன்பாக கேட் பூட்டப்படுதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதால் மேம்பாலம் அமைக்க வேண்டுமென வடலூர் மக்களின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்