குறிஞ்சிப்பாடியில் பேருந்தில் நகை திருட்டில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் ராமாபுரத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் குறிஞ்சிப்பாடி அடுத்த வேங்கடம்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்ற பொழுது குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் இறங்கிய பொழுது அவரது மணி பர்ஸ் திருடு போய் உள்ளது இதை அடுத்து அவர் கூச்சல் போட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அருகில் இருந்த சந்தேகப்படும்படியான இரண்டு பெண்களை பிடித்து சோதனை செய்தததில் அவர்களிடம் திருடப்பட்ட பொருள் இருந்தது தெரிந்தது இதையடுத்து அவர்களை குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அங்கு அவர்களை விசாரணை செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரும் நிர்மலாவின் மணிப்பரிசில் இருந்த ஒரு பவுன் நகையை திருடி இருப்பது தெரிய வந்தது தொடர்ந்து விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியைச் சார்ந்த துர்கா மற்றும் பாண்டிச்செல்வி என்பது தெரியவந்தது மேலும் இவர்கள் இன்றைய தினம் பண்ருட்டியில் இருந்து கடலூர் வந்த பேருந்தில் ஒருவரிடம் செல்போன் திருடியதும் அதேபோல் கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடு வரும் வழியில் மற்றொரு நபரிடம் செல்போன் மற்றும் நிர்மலாவின் மணி பர்சில் இருந்த ஒரு பவுன் நகை உள்ளிட்டவைகளை தேடி இருந்தது தெரிய வந்தது தொடர்ந்து FRS எனும் காவல்துறை செயலி மூலம் சோதனை செய்ததில் இவர்கள் மீது சென்னை தாம்பரத்தில் உள்ள காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது இதை அடுத்து துர்கா மற்றும் பாண்டிசெல்வியை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.