வடலூர் நகராட்சியின் ,30ஆண்டு பழைமையான பேருந்துநிலைய கட்டிடம் இடிக்க தொடங்கினார்கள்,
கடலூர், மாவட்டம்
வடலூர் நகராட்சியின் ,30ஆண்டு பழைமையான பேருந்துநிலைய கட்டிடம் இடிக்க தொடங்கினார்கள்,
கடலூர், மாவட்டம்
வடலூர் பேருந்து நிலையம் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடித்து,புதிய பேருந்து நிலைய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது,இதைத் தொடர்ந்து பேருந்துநிலையத்தை இடிக்க டெண்டர், விடப்பட்டு,இதனை இடிக்கும் பணி நேற்று திங்கள்கிழமை,
தொடங்கப்பட்டது. கடை, அலுவலகம் வைத்திருந்தவர்களுடன், அறிவிப்பு, பேச்சுவார்த்தை என பலவகை முன் எடுப்புகளை தொடர்ந்து, பேருந்துநிலைய
வாடகைதாரர்களை வெளியேற்ற
பலமுறை பல்வேறு நடவடிக்கைகளும், வடலூர் நகராட்சி சார்பில் மேற்க்கொள்ளபட்டது, சிலருக்கு மாற்று இடம் கிடைத்த நிலையில், சிலருக்கு
மாற்றுகிடைக்கவில்லை, இதனால் கடைகளை காலி செய்வதில் தாமதம் ஏற்பட்டது,தொடர்ந்து கடந்த சில
நாளாக, வாடகைதாரர்கள் கடைகளை அப்புறப்படுத்தினார்கள், நிர்வாகம் முதல்கட்டமாக, சில கடைகளின் குடிநீர் இணைப்பையும், 16ந்தேதி மின் இணைப்பையும் நகராட்சி நிர்வாகம்துண்டித்தது,இதனால் பஸ் நிலையம் முழுவதும் இருளில் மூழ்க்கியது, இன்றுதிங்கள் கிழமை முதல் பேருந்து நிலைய கட்டிடத்தின் உள்புறம் நேற்று இடிக்க தொடங்கினார்கள், இன்று செவ்வாய்கிழமையும், புதன்கிழமையும், பேருந்து நிலையத்தின் (சென்னை சாலை) பிரதான கடைகள் இருந்த பகுதி, இடிக்கப்படுகிறது, இருந்தபோதிலும், மிக பழமையான, பஸ் நிலைய கட்டிடம் உள்ள, சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய நகராட்சியில் உள்ள கட்டிடங்களை விட , இந்த புதிய கட்டிடத்தை இடிப்பது ஏன் என்பதுதான், நகராட்சி வாடகைதாரர்கள், வர்த்தக சங்கத்தினர்களின் சந்தேகமாக உள்ளது,