திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயம் 292ஆம் தேர்பவனி பெருவிழா
திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயம் 292ஆம் தேர்பவனி பெருவிழா
அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான 1716ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சுரூபம் மற்றும் ஜெபமாலை பூங்கா அமைந்திருக்கிறது. திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 22.தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து ஏப்ரல் 29ஆம் தேதி சனிகிழமை மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஐயர் அந்தோணிசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேரை மந்திரித்து தேர்பவனியை துவக்கி வைக்கிறார்.
பங்குதந்தை தங்கசாமி திருவிழா பற்றி கூறினார்
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு ஆந்திரா கர்நாடகா கேரளா பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் இருந்து சுமார் 5000 பக்தர்கள் கலந்துகொண்டனர், மேலும் மதத்தினர் கோவிலுக்கு வந்து தங்கள் உடல் நோயை தீர்க்க மாதா எண்ணெய், மாதா குளத்து மண்ணையும் பெற்று திருவிழாவிற்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளையும் செய்தனர்.