தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை தெப்ப திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தை தெப்ப திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்றத்தையொட்டி சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.பின்னர் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் 4ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து கோவிலை அடைந்தனர். தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவர்.தைத்தெப்ப உற்சவத்தின் 2ம் நாளான இன்று (15-ந்தேதி) இரவு சுவாமி வெள்ளிமஞ்சத்தில், அம்மன் கிளிவாகனத்தில், 16-ந்தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்தில், 17-ந்தேதி இரவு சுவாமி கைலாசநாதர் வாகனத்தில், அம்மன் அன்னபட்சி வாகனத்தில், 18-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில், 19-ந்தேதி இரவு சுவாமி யானை வாகனத்தில், அம்மன் பல்லக்கில், 20-ந்தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளி மஞ்சத்தில், 21-ந் தேதி இரவு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில், அம்மன் பல்லக்கில் 4ம் பிராகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.திருவிழாவின் 9ம் நாளான 22-ந்தேதி காலை சுவாமி. அம்மன் மரக்கேடயத்தில் 3ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். இரவு சுவாமி நந்தி வாகனத்தில், அம்மன் சேஷவாகனத்தில் 4ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.10ம் நாளான 23-ந்தேதி காலை சுவாமி கேடயத்தில், அம்மன் வெள்ளிமஞ்சத்தில் 4ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். இரவு சுவாமி யாழி வாகனத்திலும், அம்மன் புலி வாகனத்திலும் 3மற்றும் 4ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.தை தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்பம் 24- ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 6.20 மணிக்கு மேல் மாலை 7.20 மணிக்குள் கடக லக்னத்தில் திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவர். விழாவிற்கான ஏற்பாடுகளை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial