மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து.
தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும் வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம்.
கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிவது நல்லது.
பாதிப்பு அதிகரித்தால், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும்.
கொரோனா பரவல் – அமைச்சர் விளக்கம்.*
தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவ துறையினரும் இணைந்து கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் மாநிலம் முழுவதும் 51 போலி மருத்துவர்கள் கைது.
அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 15 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.