தாலி கட்டும் நேரத்தில் அடம்பிடித்த மாப்பிள்ளை; உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்ற முயன்றது அம்பலம்!
பெலகாவி மாவட்டம் கானாப்புராவை சேர்ந்தவர் சச்சின் பட்டீல். இவர் பெலகாவி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார். இந்த நிலையில் இவருக்கும், கானாப்புராவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது சச்சின் பட்டீலுக்கு வரதட்சணையாக ரூ.5 லட்சம் ரொக்கமும், 50 கிராம் தங்க நகைகளும் கொடுப்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில் மணமகன் சச்சின் பட்டீல் தாலி கட்டும் சமயத்தில், தனக்கு ரூ.10 லட்சம் ரொக்கமும், 100 கிராம் தங்கமும் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என தெரிவித்து அடம்பிடித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன உறவினர்கள் இதுகுறித்து கானாப்புரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் திருமண மண்டபத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்போது, திருமணம் நிச்சயம் செய்த பிறகு, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுடன் சச்சின் பட்டீல் பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது இளம்பெண்ணுடன் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அவர் உல்லாசமும் அனுபவித்துள்ளார். தற்போது அதனை சாதகமாக பயன்படுத்தி கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தி அம்பலமானது. இதையடுத்து கானாப்புரா போலீசார் சச்சின் பட்டீலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.