தொழில் பயிற்றுநர் பயிற்சி முகாம் தொடக்க விழா*
கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
தே.தனுஷ் – 8667557062
தே.தனுஷ் – 8667557062
*தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் பல்தொழில்நுட்ப மாணவர்களுக்கான தொழில் பயிற்றுநர் பயிற்சி முகாம் தொடக்க விழா*

நெய்வேலி தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் (NPTI), தமிழ்நாடு அரசின் ஜோலார்பேட்டை அரசு பல்தொழில்நுட்ப மாணவர்களுக்கான மின்உற்பத்தி பயிற்சி தொடக்க விழா நெய்வேலி வட்டம் தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்திய அரசு நிறுவனமான தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன தேசிய டைரக்டர் ஜெனரல் டாக்டர் திப்தா தாகூர் அவர்களின் ஆலோசனையின் படியும், நெய்வேலி மின்சக்தி பயிற்சி நிறுவன முதன்மை இயக்குநர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு அரசின் பல்துறை மாணவர்கள் மற்றும் பொறியாளர்களுக்கான பணியிடைப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாபட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகின்றது. இதன்படி, ஜோலார்பேட்டை அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்களுக்கான 25 நாள் மின்உற்தப்தி மைய பழக்கப்படுத்துதல் பயிற்சி மே 10தேதி தொடங்கி ஜுன் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில்
நெய்வேலி தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன துணை இயக்குநர் முத்துகுமார் தலைமை தாங்கினார். என்எல்சி நிலக்கரி நிறுவன பயிற்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் பொதுமேலாளர் பாண்டியன்,
ஜொலார்பேட்டை அரசு பல்தொழில்நுட்ப பயிற்சி மைய இயந்திரப் பொறியியல் துறைத்தலைவர் அருணாசலம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
விழாவில் மின்சக்தி பயிற்சி நிறுவன துணை இயக்குநர் முனைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
25 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் ஜோலார்பேட்டை அரசு பல்தொழில்நுட்ப நிறுவன மாணவர்கள் 114 பேர் பயிற்சிபெற உள்ளனர்.
விழாவில் தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன துணை இயக்குநர்கள், அலுவர்கள், நெய்வேலி நிலக்கரி நிறுவன அலுவலர்கள்,ஜோலார்பேட்டை அரசு பல்தொழில்நுட்ப பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.