அதிமுக கழகப் பொதுச் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தர்மசாலையில், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சக்தியான சபை வளாகத்தில் அமைந்துள்ள தர்மசாலையில், கழக பொது செயலாளரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு,அதிமுக வடலூர் நகரக் கழக செயலாளர் சி.எஸ் பாபு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அன்னதான நிகழ்வினை, அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான சொரத்தூர். ராஜேந்திரன் அவர்கள் ஏழை, மக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக அதிமுக கழக நிர்வாகிகளுடன் வள்ளலார் சபை வளாகத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டார்
இதனைத் தொடர்ந்து வடலூர் பேருந்து நிலையத்தில், அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலில், பொது மக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்நிகழ்வில் வடலூர் நகர அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.