ஆசிரியர் கூட்டணி, ஓய்வூதியம் கேட்டு உண்ணாவிரதம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு உண்ணாவிரதம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில்
கடலூரில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்திடவும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடவும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைந்திடவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஊதியத்தை வழங்கிடவும் மேற்படிப்புக்கான ஊக்க ஊதியத்தை வழங்கிடவும் இதுபோன்று இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 300க்கும் மேற்பட்ட இயக்க உறுப்பினர்கள் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்டச் செயலாளர் அந்தோணி ஜோசப் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சகாய தேவதாஸ் அனைவரையும் வரவேற்றார். மாநிலத் துணைச் செயலாளர் செல்வி உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். மாநில பொருளாளர் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். மாவட்ட முன்னாள் செயலாளர் நாராயணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சுரேஷ் நன்றி கூறினார்.மாநில மாவட்ட மற்றும்வட்டார இயக்க பொறுப்பாளர்கள் கோரிக்கைகளின் நியாயங்களை எடுத்துப் பேசினர். மங்களூர் நல்லூர் விருத்தாசலம் குறிஞ்சிப்பாடி காட்டுமன்னார்குடி பண்ருட்டி அண்ணா கிராமம் மற்றும் கடலூர் வட்டார இயக்க உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.