“செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் கனமழை”
செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் கனமழை தமிழகத்தி ல் செங்கல்பட்டு, தேனி உள்ளிட்ட நான்கு மா வட்டங்களில் மதி யம் ஒரு மணிக்குள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மை யம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமி ழகத்தின் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் மே 15 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் வெயில் நிலவுகிறது. மே 10, 11-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மே கமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மி தமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.மே 12-இல் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி , வி ருதுநகா் , தென்காசி , திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வியாழக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மி மீ): கொள்ளிடம் (மயிலாடுதுறை ) 70, குடிதா ங்கி (கடலூா் ), சாத்தையாறு (மதுரை ) தலா 50, ஆழியார் (கோவை ) 40, கிளன்மார்கன் (நீலகிரி ), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி ), பேரையூா் (மதுரை ), வால்பாறை (கோவை), அண்ணாமலைநகா் (கடலூா் ),வனமாதேவி (கடலூா் ), மேல்கூடலூா் (நீலகிரி), புத்தன்அணை (கன்னியா குமரி ), நடுவட்டம் (நீலகிரி ), தொழுதூா் (கடலூா் ) தலா 30.