அரியலூர் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்.
அரியலூர் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள்.
ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்
அரியலூர் மாவட்டத்தில் ஐயப்பன், விநாயகர் கோயில்களில் கார்த்திகை முதல் நாள் அன்று அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டுக்கொள்வதற்கு தேவையான துளசி மாலைகள் ருத்ராட்ச மாலைகள் வேட்டிகள் விற்பனையும் கலைகட்டியது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் D.வேல்முருகன்