மாணவியிடம் ஆபாச பேச்சு!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு உயிரியல் ஆசிரியராக ஜெயராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவரிடம் ஆசிரியர், ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் தென்காசி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர். அதன்பேரில், தென்காசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஜெயராஜை கைது செய்தனர். மேலும் மாணவி குறித்து அவதூறு பதிவிட்டதாக பள்ளி மாணவர்கள் 10 பேர் மீது செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.