சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு
சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு
கடலூர், மாவட்டம் வடலூரில் டி ஆர் எம் சாந்தி திருமண மகாலில் வள்ளலார் வரலாறு 200வது ஆண்டு ஜெயந்தி விழா தொழிலதிபர் பண்ருட்டி மோகனகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுகிறது ,கடலூர் வள்ளி விலாஸ் பாலு வள்ளலார் 200 ஜெயந்திவிழா ஒருங்கிணைப்பாளர் , அன்னதான ஆலயத்தின் நிர்வாகி தனலட்சுமிஅம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை வரலாறு மிஷின் நிர்வாகி சாது ஜானகி ராமன் ஐயா அனைவரும் வரவேற்றார், வாதவூர் அடிகளார் ஆசியுரை வழங்கினார்.
கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சிறப்புரையாற்றினார், ஆளுனர் பேசுகையில்…
உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். அப்போது வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்பை ஏற்படுத்தியது.
பத்தாயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்.
அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர். அடிப்படை உண்மை என்பது ஒரு பரமேஸ்வரன். அவன் படைத்தது மனிதன், விலங்குகள், செடி கொடி என அனைத்தும் ஒரு குடும்பமே.
இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்கள் உடை, தோற்றம் என வெவ்வேறாக உள்ளது. உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது சனாதன தர்மம்.
சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள். “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்”
(தமிழில் பேசினார்)
என்னும் வள்ளலாரின் வரிகள்
சனாதன தர்மத்தின் எதிரொலி.
200 ஆண்டுகளுக்கு முன்
கார் இருளை நீக்க வந்த ஜோதி தான் வள்ளலார்.
ஆங்கிலேயரின் கடுமையாக சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் தான் வள்ளலார்.
நமது பாரதம் சனாதன தர்மம் .ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்தால் போதும்.*புதியதாக வெளிநாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது.
இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால், ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை.
வெளியில் இருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்சினை உருவானது.
பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். ஆன்மீகத்தில் உயர்ந்த நாடு பாரதநாடு.
நமது நாட்டின் பிரதமர் பேசுவதை உலக தலைவர்கள் எதிர் பார்த்தும், கவனித்துக்கொண்டுள்ளனர்.
இந்தியா வல்லரசாகி உலகத்தின் தலைமையை ஏற்கும்.
இந்தியா வளர்ச்சிப்பாதையை செல்லும் போது
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் வார்த்தையை ஏற்போம். என்று அவர் பேசினார்.
முன்னதாக மாநில சாது சிவகுமார் சுவாமிகள் தலைமையில், தொழிலதிபர் எஸ்ஆர்பாலு முன்னிலையில், எம்எஸ் கார்த்திக் குழுவினரின் திருவருட்பா இன்னிசை கச்சேரி நடைபெற்றது, தொடர்ந்து டிஆர்எம் சாந்தி ஏஜன்சி அதிபர் ராஜமாரியப்பன் தலைமையில், தொழிலதிபர் நடுவீரப்பட்டு கண்ணன் முன்னிலையில், தாமல் சரவணன் சன்மார்க்க சொற்பொழிவு ஆற்றினார், நிகழ்ச்சியில், வள்ளலார் 200வது தலைவர் பலர் கலந்து கொண்டனர்,விழாவில்சன் மார்க்க சேவையாற்றிய டி ஆர்எம் சாந்தி ஏஜன்சிஸ் அதிபர் ராஜமாரியப்பன், உள்ளிட்ட 11 பேருக்கு ஆளுநர் ஆர் என் ரவி விருது வழங்கப்பட்டது.