தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் நடத்திய இலவச மருத்துவ முகாம்
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் கேம் பெனிஃபிட் டிரஸ்ட் மற்றும் பிரைம் இந்தியன் மருத்துவமனை இணைந்து நடத்திய சங்க உறுப்பினர் மற்றும் குடும்பத்திற்கான இலவச மருத்துவ முகாம் மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் இசிஜி ,பிஎம்ஐ, ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான மருத்துவம் எலும்பு மருத்துவம் பல் சிகிச்சை மற்றும் கண் சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இந்நிகழ்வை சங்கத்தின் தலைவர் திரு ஏ கார்த்திக் ராஜா , பொதுச் செயலாளர் எம் இளவரசு, பொருளாலர் சக்தி சரவணன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்