நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த பரணம் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து, மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் இரும்புலிகுறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், செந்துறை ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா மதியழகன், வழக்கறிஞர் சங்கத்தலைவர் காரல்மார்க்ஸ் மற்றும் காவேரி கூக்குரல் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், அரியலூர் மாவட்ட ஈஷா நர்சரி பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டனர்.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. ஈஷா நாற்று பண்ணைகளில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் ரூ.3-க்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.