ஆர் எஸ் மாத்தூர் பகுதியில் வடமாநில மணிப்பூர் கலவரத்தை கண்டித்து வட்டார காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆர் எஸ் மாத்தூர் பகுதியில் வடமாநில மணிப்பூர் கலவரத்தை கண்டித்து வட்டார காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
அரியலூர், ஜூலை.28-
அரியலூர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட செந்துறை வட்டார காங்கிரஸ் சார்பில், மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர்களுக்கிடையே நடைபெறும் கலவரத்தை தடுத்து நிறுத்த முடியாத மணிப்பூர் மாநில பாஜக அரசை கண்டித்தும்,
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பலாத்காரத்தை தடுத்து நிறுத்த முடியாத மத்திய அரசை கண்டித்தும் செந்துறை வட்டார காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் ஆர். எஸ். மாத்தூரில், மெழுகு வர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வட்டாரத் தலைவர்கள் இராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் துளார் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டமானது மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்.எஸ்.மாத்தூர் பேருந்து நிலையத்தில் மணிப்பூர் பாஜக ஆட்சி பதவி விலக கோரி கோசங்கள் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்தில் வாளரகுறிச்சி சுப்பிரமணியன், கீழமளிகை கணேசன்ராசு, தொப்பி சுப்பிரமணியன், அய்யாக்கண்ணு, பொன்பரப்பி குணசேகரன்,ஆர். எஸ்.மாத்தூர் ராசாங்கம், பாலாஜி, இளைஞர் காங்கிரஸ் ராஜாசந்திரசேகர், டெல்டா சேகர் கணேசன் பிசிசி, முருகேசன், முருகன் பரமசிவம், பஞ் சாநாதன், செல்வராசு, பூக்கடை செல்வராசு, கவிதாசன், ரெங்கநாதன், கோவிந்தராசு, மனப்பத்தூர் கோவிந்தசாமி, உலகநாதன், மதன்ராஜ், மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T