தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி!
புதுதில்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் கலந்து கொண்ட பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், வண்ணமிகு ரங்கோலி கோலம் போன்றது நமது கலாச்சாரம், சிறுதானியங்களில் முக்கியத்துவம் பற்றி தமிழ் சங்க இலக்கிய நூல்களில் கூறியதை பற்றியும், நல்லாட்சி பற்றி திருக்குறளை மேற்கோள்காட்டி உவமையாக கூறியது மிகச்சிறப்பாக இருந்தது.
தமிழின் பெருமையையும், தொன்மையையும்,கலாச்சாரத்தையும் அவர் சிறப்பாக எடுத்துக்கூறியது
தமிழர்கள் ஒவ்வொருவரையும் பெருமைப்பட வைத்தது என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.