“சடையன் குட்டை” குறித்து நாம் தமிழர் கட்சி நகராட்சி அலுவலகத்தில் மனு!
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மற்றும் விருத்தாச்சலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் விருத்தாசலம் நகராட்சி உட்பட்ட (வார்டு எண்-2) டேனிஷ் மிசன் பள்ளி முன்பு அமைந்துள்ள “சடையன் குட்டை” -யில் கள ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் நெகிழி குப்பைகள் மற்றும் புதர்கள் இதை அகற்றி தூர்வார விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் கதிர்காமன் தலைமையில், விருதாச்சலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் ராஜேந்திரன் முன்னெடுப்பில் மாவட்ட பொறுப்பாளர் அன்பரசன், மகளிர் பாசறை செயலாளர் ஆனந்தி மற்றும் கார்த்திக் ஆகியோர் கலந்து கலந்துகொண்டு மனு அளித்தனர்.