சிறுமியை சீரழித்த ‘காமுகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை’!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அருங்குறுக்கை வடக்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 53), கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளியான இவர் கடந்த 4.1.2020 அன்று கரும்பு தோட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 13 வயது சிறுமியிடம் சென்று அருங்குறுக்கை காட்டினுள் ஆடு மேய்ப்போம் என்றுகூறி அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் உனது தந்தையை கத்தியால் குத்திவிடுவேன் என்று சிறுமிக்கு பன்னீர்செல்வம் மிரட்டல் விடுத்தார். பின்னர் 10.1.2020 அன்று மீண்டும் அந்த சிறுமியை பன்னீர்செல்வம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமி, தனது தந்தையிடம் கூறி அழுதாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பன்னீர்செல்வம், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *