“சேலம் பயணிகள் ரயிலுக்கு வரவேற்பு”

கடலுார், : கடலுார் துறைமுகத்தில் இருந்து சேலத்திற்கு மீண்டும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.கடலுார் துறைமுகம் சந்திப்பில் இருந்து சேலத்திற்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. இதனையொட்டி கடலுார் துறைமுகத்தில் நடந்த விழாவில், தென்னக ரயில்வே பயணிகள் சங்க சிறப்புத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கி, ரயில் டிரைவர் ஜெயபிரகாஷ், கார்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன், நிலைய மேலாளர் திருக்கோட்டி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்தார்.தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் ராஜமோகன், குடியிருப்போர் நலச்சங்க இணைப் பொதுச் செயலாளர் தேவநாதன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். ரயில் பயணிகள் நலச்சங்க துணை செயலாளர் முனுசாமி, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.பின், மத்திய ரயில்வே துறைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், ராஜா, வைரவன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial