பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி!
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 55-ஆவது நினைவு நாளான 3.2.2024 – சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள்; மாவட்டக் கழக நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 3.2.2024 அன்று ஆங்காங்கே பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவப் படங்களை வைத்து மலர் அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.