ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம் கொண்டாடப்பட்டது
ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் குழுமத்தின் அமைந்துள்ள பி.எம் பப்ளிக் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் அருளாம்பிகை வரவேற்று பேசினார். தாத்தா பாட்டியின் சிறப்பினை கல்வி குழும நிறுவன தலைவர் பழனிவேல் மற்றும் துணை தலைவர் சுரேஷ் பேசினார்.பழங்கால வாழ்க்கை முறைக்கு உதவிய பழங்கால பொருட்களான படி ,மாகாணி, மரக்கால் முறம், செம்பு வெட்டுக்கத்தி, கதிர் அறுக்கும் அறிவாள்,உரல், உலக்கை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது,
இதில் 150க்கும் மேற்பட்ட தாத்தா பாட்டிகள் கலந்துகொண்டு அவர்களுக்கான பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன,
நிகழ்ச்சியில் மாணவர்களுடைய, பழைய பாடல்கள் கலை நிகழ்ச்சி, மாறுவேடம் கட்சி நடைபெற்றன. கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன தாத்தா பாட்டி தினத்தை தாத்தா பாட்டிகள் கொண்டாடியது புதுமையாகவும் விசித்திரமாகவும் கண்ணை கவரும் வண்ணமாக அமைந்தது.
அரியலூர் மாவட்டம் செய்தியாளர் D. வேல்முருகன்