நெல் ஜெயராமன் நினைவு நாளில் காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடப்பட்டது
நெல் ஜெயராமன் நினைவு நாளில் காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடப்பட்டது
நெல் ஜெயராமன் ஐயா நினைவு நாளை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக அரியலூர் மாவட்டம் ,உடையார் பாளையம் வட்டம், துளாரங்குறிச்சி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைப்பெற்றது ,இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உடையார்பாளையம் உதவி காவல் ஆய்வாளர் திருவேங்கடம், துளாரங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சுவேதா செந்தில்குமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர் .
நெல் ஜெயராமன் ஈஷாவின் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர். ஈஷா பசுமைக் கரங்களுடன் இணைந்து 10, ஆயிரம் மரக்கன்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியவர். அவரின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக காவேரி கூக்குரல் இயக்கம் மரம் நடும் பணிகளையும், மண் காப்போம் இயக்கம் மூலம் இயற்கை விவசாயப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது.தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நாற்று பண்ணைகளில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு டிம்பர் மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.இந்நிகழ்வினை ஈஷா காவேரிக்குரல் திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஒருங்கிணைப்பு செய்தார். இதில் அரியலூர் மாவட்ட ஈஷா நாற்றுப்பண்ணையின் பொறுப்பாளர் சரவணன கலந்து கொண்டார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வேல்முருகன்.