மாசி மகம் மகத்துவம் மிக்கது…!

சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிபவுர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது.மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் புண்டரீக மகரிஷி, மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய

முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார்.இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.மகநட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக

நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது.இந்நாள் முருகப்பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான். முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர்க்கடன் செய்வது நன்மை தரும்.ஒருமுறை சமுத்திரராஜனான

வருணபகவானுக்குபிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது.அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும் படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்றசிவபெருமான்வருணபகவானைவிடுவித்தார்.அவர்விடுதலை பெற்றநாள்மாசிமகதிருநாளாகும். விடுதலை பெற்றவருணபகவான்மனம் மகிழ்ந்து இந்த நாளில் அனைவரும் புனித நீராட வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் கேட்டார்.மாசிமகம் பித்ரு தோஷம் நீக்கும் தடைகள் நீக்கும் புனித நாளாகும்.பெண்களுக்குரிய விரத தினம் ! உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள்Dதாட்சாயணியாக அவதரித்தார் என்பதால்

மிகவும்புண்ணியநாளாக்கருதப்படுகிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த ல் பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசிம் மகத்தன்றுதான்.5உலகத்தைப் படைப்பதற்காக, உலகப் பொருட்கள் அனைத்தையும் ஒரு கும்பத்தில் வைத்தனர். அது நீரில் மிதந்து வரும் பொழுது, கும்பத்தை இறைவன் அம்பால் எய்ய அதன் மூக்குப் பகுதி, அதாவது முன்னால் இருக்கும் கூம்பு போன்ற கோணப் பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடமே ‘கும்பகோணம்’ என்ற திருத்தலமாகப் பெயர் பெற்றது.மாசிமக தினத்தன்று கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் – பலபாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்திற்குவருவார்கள். காசியில் பிறந்தோர் – பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன.மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும்

ஐதீகம்.பிரளயத்துக்குப் பிறகு, உலக உயிர்கள் அனைத்தும் ஒரு குடத்தில் இருந்து தோன்றிய தலம் என்பதால் கும்பகோணமே உலக உயிர்களின் பிறப்பிடம் என்று கூறுவர். ஒட்டுமொத்த உயிர்களின் பீஜங்களும் பாதுகாக்கப்பட்டு பெரும் ஊழிக்குப் பிறகுஇங்கேதான் உடைக்கப்பட்டு மீண்டும் சிருஷ்டி தொடங்கியது என்பது ஐதிகம். கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்திரா, கிருஷ்ணா,சரயு ஆகிய நதிகளின் பாவத்தை நீக்கிய திருக்குளம் இது. மகாமக தினத்தில், ஒன்பது நதிகளும் இங்கு வந்து நீராடி மீண்டும் புண்ணிய நதிகளாகப் பொலிவு பெறுவதாகட் புராணம் கூறும்.மாசி மகத்தில் மகாமகக் குளத்தில் நீராடுவோரின் பாவங்கள், தோஷங்கள், நோய்கள்யாவும் நீங்கிஞானமும், ஆரோக்கியமும்,சகலசம்பத்துகளும்பெறுவார்கள். அதேபோல், ஒருமுறை மகாமகக் குளத்தில் நீராடினால், காசியில் நூறாண்டு காலம் வாழ்ந்த புண்ணியமும், உலகை வலம் வந்த பலனும் கிட்டும் என்பர்.மாசி மகத்தில் நீராடுவது மட்டுமல்ல தானங்கள் கொடுப்பதும் விசேஷமானது. அந்த வகையில், 20 வகை தானங்களை விளக்குவார்கள் பெரியோர்கள். பூமி தானம். திருமணதுக்கான தானம், ஸ்வர்ண தானம், பூணூல் தானம், கோ தானம், அஸ்வ தானம், காளை தானம், அன்னதானம், பாய்ஸ் தானம், தான்ய தானம், தென்னங் கன்று தானம், குப்த தானம், சந்தன தானம், முத்து தானம்,

நவரத்ன தானம், தேன் தானம், எள்ளு தானம், மாதுளம் பழ தானம், உப்பு தானம் மற்றும் பதினாறு வித பழங்களை பதினாறு பேருக்கு தானம் அளிப்பது.மக நாளில் அதிகாலையில் நல்ல நேரம் பார்த்து சுவாமியை நோக்கி குளத்திலே மூழ்க வேண்டும். மூழ்கி எழும் நேரத்தில் இறைவனைத் துதி பாடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையிலும் மனம் ஒப்பக்கூடாது. நீராடலின் பலனை நிறைவாகப் பெற தீர்த்தக் கிணறுகளை நோக்கியும் கைகூப்பி வணங்க வேண்டும். பிறகு கோயிலின் பொற்றாமரைக் குளத்தில் சுவாமி இருக்கும் திசையை நோக்கி மூழ்கி எழ வேண்டும். பிறகு காவிரி தீரத்திலும் நீராட வேண்டும். உடம்பிலுள்ள ஈரம் வடியவடிய ஒட்டுமொத்த பாவங்களும் வடிவதாக ஐதிகம் கூறுகிறது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial