என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அராஜக போக்கை பற்றி-துண்டு பிரசுரம் விநியோகம்
கடையாக சென்று, தொழிலதிபர்கள், வணிகர்கள், சாலையோர கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்க துடிக்கும், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அராஜகங்கள் பற்றியும், கடலூர் மாவட்ட மக்கள் மற்றும் தமிழக மக்களுக்கு செய்யும் அநீதிகள் பற்றியும், துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் கடலூர் மாவட்டத்தை வஞ்சிக்கும் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியேற வேண்டும் எனவும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பாமக தொண்டர்கள் என்எல்சி நிறுவனத்தை கண்டிப்பாக வெளியேற்றுவோம் என பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
அது மட்டும் இல்லாமல், விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய தமிழக அரசானது, என்எல்சி இந்தியா நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு, கடலூர் மாவட்ட மக்களை சொந்த மண்ணிலேயே, அகதிகளாக ஆக்க கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆதரவாக போராடிவரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீது விமர்சனம் செய்வது கண்டனத்துக்குரியது எனவும், என்எல்சி நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்ட, தமிழக அரசின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டதால், வருங்காலங்களில், மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வில் மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜய வர்மராயர், நகர செயலாளர் புஷ்பராஜ், தலைவர் செந்தில்குமார், பொருளாளர் மகாலட்சுமி, மாவட்ட அமைப்பு தலைவர் ஜிந்தா ரவி, அமைப்பு செயலாளர் குமரகுரு, மாவட்ட துணைத் தலைவர் குமரவேல், மற்றும் செந்தில்வேல், பழனி, முருகன், செல்வசோழகன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.