நெய்வேலியில்என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை,போராட்டம்…
நெய்வேலியில்என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை,போராட்டம்…
26.07.2023
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று மாலை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையடுத்து, என்எல்சி நிறுவனத்தில் மனிதவளத்துறை அதிகாரியிடம், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச மற்றும் அண்ணா தொ.ஊ. சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, 517 சொசைட்டி தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்து வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று என்எல்சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்