அருள்மிகுஶ்ரீ கங்கையம்மன், (ரேணுகாம்பாள்)திருக்கோயில், கோபுர தரிசனம்
அருள்மிகுஶ்ரீ கங்கையம்மன்,
(ரேணுகாம்பாள்)திருக்கோயில்,
கோபுரதரிசனம்
அருள்மிகுஶ்ரீ கங்கையம்மன்,
(ரேணுகாம்பாள்)
கெங்கையம்மன் திருக்கோயில்,
வேலூர் மாவட்டம்.குடியாத்தம் நகரத்தில் உள்ளது
பல சிறப்புகள்,பெற்ற இத்தலத்தின்
தகவல்களை பார்ப்போம்,
குடியாத்தம் நகரை இரண்டாக பிரிக்கும் கெளண்டன் யமகாநதியின் கரையில்,சுமார் 500ஆண்டுகள் பழமையான, சமீபகாலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள ஆலயத்தின் கருவறையில்
ஸ்ரீ கங்கையம்மன் என்றழைக்கப்படும், கெங்கையம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறாள்.
( மன்னர்கள் காலத்தில், அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியில் காடுகளை அழித்து மக்களை குடியேற்றம் செய்ததினால், “குடியேற்றம்” என்றழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில்
பெயர் மருவி “குடியாத்தம்” என அழைக்கப்படலாயிற்றாம். மேலும்,
நமது பாரதத்தின் தலைநகர்
புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் ஏற்றப்பட்ட
நமது இந்திய அரசின்,முதல் தேசியக்கொடி இங்குள்ள நெசவாளர்களால் நெய்யப்பட்டது என்பதும், ‘தெய்வத்திரு’
‘கர்மவீரர்’ காமராஜர் ஐயா,
இந்த தொகுதியில் வெற்றி பெற்றுதான் முதன்முதலாக
நமது தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் என்பதும் இவ்வூரின் தனிச்சிறப்பாகும்,
ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் பரசுராமர்,தனது தாய் ரேணுகாதேவியின் தலையை வெட்டி மீண்டும் சேர்த்து உயிர்பித்த புராண கதையை நினைவுகூறும் விதமாக நடைபெறும்
பிரசித்தி பெற்ற “சிரசுத்திருவிழா”.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமைமிகு ஆலயங்களில் ஒன்றான இத்தலத்தின் அம்பிகைக்கு, சித்திரை 15-ல் கொடியேற்றத்துடன் துவங்கி 17-நாட்கள் நடைபெறும்
“சிரசுத் திருவிழா” (சிரசு என்றால் தலைப்பகுதி)
நமது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆந்திர, கேரள, கர்நாடக, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டாடிடும் பெரும் திருவிழாக்காலமாகும்.
(இதில் வைகாசி 1-ல் அம்மனின்
சிரசு ஊர்வலம் நடைபெறும் அன்று மட்டும் சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் திரளுவது வழக்கம்
“கேட்ட வரம் அருளும் கெங்கையம்மா” எனப் போற்றப்படும்,
இத்தலஅம்பிகைக்கு,
நலமும் வளமும் சிறக்க நடைபெறும் வெள்ளிக்கிழமை வழிபாடு மற்றுமொரு தலவிசேஷம்).
ஓம் ஸ்ரீ கெங்கையம்மன் தாயே போற்றி,போற்றி,